தூத்துக்குடியில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் கைது

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் ஒரு கொத்தனார், தினசரி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
தூத்துக்குடியில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் கைது
Published on

தூத்துக்குடி, தாளமுத்துநகர், ஜேசு நகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் நட்டார் (வயது 55), கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்தம்மாள்(45). இந்த தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். நட்டார் தினசரி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு குடி போதையில் வீட்டுக்கு வந்த நட்டார், மனைவி முத்தம்மாளிடம் தகராறு செய்து அவரை இரும்பு கம்பியால் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த முத்தம்மாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நட்டாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com