குடும்ப பிரச்சினையில் மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவன் கைது

மானூர் அருகே ராமையன்பட்டி பகுதியில் கணவன் தனது மனைவியிடம் அடிக்கடி பிரச்சினை செய்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், மானூர், ராமையன்பட்டி, சங்குமுத்தம்மாள்புரத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 48), அங்காளஈஸ்வரி(44) ஆகிய இருவரும் கணவன் மனைவி ஆவர். கண்ணன், அங்காளஈஸ்வரியிடம் அடிக்கடி பிரச்சினை செய்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று கண்ணன் மீண்டும் அங்காளஈஸ்வரிடம் பிரச்சினை செய்துபோது, அதனை அங்காளஈஸ்வரி தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், அவரை பெண் என்றும் பாராமல் அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி ரத்தக் காயம் ஏற்படுத்தியதோடு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அங்காளஈஸ்வரி மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கண்ணனை இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.
Related Tags :
Next Story






