தூத்துக்குடியில் மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் மனைவியை கொடுமைபடுத்திய வழக்கில் கணவனை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை
Published on

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை, நடுகூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் சிவா (வயது 34) கடந்த 2014-ம் ஆண்டு தனது மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிவாவை கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜய் ராஜ்குமார் இன்று குற்றவாளி சிவாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட உதவி அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் ஆனந்தஜோதி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com