

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஐதராபாத்தில் இருந்து கொல்லத்திற்கு வாராந்திர ரெயிலாக சனிக்கிழமைகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 07193) ஜூலை 4-ந் தேதி முதல் செப்டம்பர் 26-ந் தேதி வரை (13 சேவைகள்) நீட்டிக்கப்படுகிறது.
மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து ஐதராபாத்திற்கு வாராந்திர ரெயிலாக திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (07194) ஜூலை 6-ந் தேதி முதல் செப்டம்பர் 28-ந் தேதி வரை (13 சேவைகள்) நீட்டிக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.