கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் தொடக்கம்

உலகின் முதலாவது ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அணு சக்தி துறை தொடங்கியுள்ளது.
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் தொடக்கம்
Published on

சென்னை,

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அதிவேக சோதனை ஈனுலையில் இருந்து உருவாகும் அணு பதன வெப்பத்தை பயன்படுத்தி, தாமிரம்-குளோரின் வெப்ப வேதியியல் சுழற்சியை அடிப்படையாக கொண்டு உலகின் முதலாவது ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அணு சக்தி துறை நேற்று தொடங்கியது.

ஹைட்ரஜன் உற்பத்தி தொழில்நுட்பம்

இந்த நிலையத்தை அணுசக்தி துறையின் செயலாளரும், அணுசக்தி ஆணையத்தின் தலைவருமான அஜித்குமார் மொஹந்தி திறந்து வைத்தார். இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் ஸ்ரீகுமார் ஜி முன்னிலை வகித்தார். இந்த ஆலை அணுசக்தி உதவியுடன் ஹைட்ரஜன் உற்பத்தி தொழில்நுட்பங்களை வணிகரீதியாக பயன்படுத்துவதற்கு பெரிய அளவில் விரிவுபடுத்துவதை நோக்கமாக கொண்ட எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு உதவும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com