இடைத்தேர்தலுக்காக நான் வெறியோடு காத்து இருக்கிறேன் - சீமான் ஆவேசம்

முதல்-அமைச்சர் ஆன பிறகு ஜோசப் விஜய்.. ஏன் முதல் படத்தில் அறிமுகமாகும்போது ஜோசப் விஜய் என்று போடவில்லை? என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
சீமான்
Published on

சென்னை,

இடைத்தேர்தலுக்காக நான் வெறியோடு காத்து இருக்கிறேன் என சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் புதிதாக 1,000 பேர் இணையும் நிகழ்ச்சி, பல்லாவரத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது:-

திரள் நிதி கூட்டம்

நடிகருக்கும் தலைவருக்கும் வித்தியாசம் தெரியாத தறுதலை கூட்டம், நடிகனிடம் ஆட்சியை கொடுத்துவிட்டார்கள். பிளாக்கில் டிக்கெட் விற்ற கூட்டம் எங்களை திரள்நிதி கூட்டம் என்கிறார்கள். திரள்நிதி திருடர்கள் என்கிறார்கள், இது மக்கள் இயக்கம்; மக்களிடம் இருந்துதானே பெறமுடியும், நீங்கள் வாக்குகளை மக்களிடம்தானே கேட்கிறீர்கள்; நாங்கள் வாக்குகளையும் கேட்கிறோம், வலிமையையும் கேட்கிறோம் திரள்நிதியில் ஒரு தேநீர்கூட அருந்தமாட்டோம்.

பென்ஸ் கார்

சீமான் பென்ஸ் கார் வாங்கிட்டார்னு சொல்றாங்க, என்னுடைய மாமா ஒருத்தர் கார் வாங்கி கொண்டு வந்து வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு சென்றார்.

தமிழகத்தில் இத்தனை தொகுதி இருக்கும்போது பெரம்பூரில் மதம், திருச்சி கிழக்கில் சாதி மதம் காரணங்களுக்காக போட்டியிட்டுவிட்ட ஜோசப் விஜயால், எப்படி சாதி மதத்தை ஒழிக்க முடியும்?

திமுக செய்த வெறும் விளம்பர அரசைத்தான், இவர்களும் செய்கிறார்கள். மக்கள் பணத்தை வீணடிக்க மாட்டோம் என்றவர்கள் பஸ் நிலையங்களில் விளம்பர பதாகை வைத்துள்ளார்கள். இவ்வளவு கோடிகளை செலவழித்து எதுக்கு தெருத்தெருவாய் விளம்பரம். விளம்பர அரசுதான்.. ஒன்லி ரீஸ்தான் தினமும் நடந்து கொண்டிருக்கிறது.

மின்சார வெட்டு

6 மணி நேரம் தான் தமிழ்நாட்டில் மின்சாரம் இருக்கிறது. ஆனால் அதற்கு இவ்வளவு மின் கட்டணம் வந்துள்ளது. இன்னும் 6 மாதம் கழித்து யாரும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஓட்டு போடுவோம் என்று சொல்ல மாட்டார்கள். மீன்பிடிக்கு சென்று 850 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்துக்கு ஏதாவது நிதியோ, அரசு பணியோ கொடுக்கப்பட்டதா? ஆகவே கரூர் அசம்பாவிதத்திற்கு அரசு வேலை கொடுத்ததை நான் எதிர்ப்பேன்.

லஞ்சம் கேட்டா கொடுக்காதீர்கள் என்று சொல்லக்கூடியவர், லஞ்சம் வாங்கினால் அவரை டிஸ்மிஸ் செய்வேன் என்று சொல்ல முடியவில்லை. ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீரை தருவதற்கு முன் வரும் மத்திய அரசு, நதிநீரை பெற்று தர ஏன் முன்வரவில்லை? இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள் என்று காத்து இருக்கிறேன் வெறியோடு இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com