தவெக ஆட்சி உண்மையாகவே மக்களுக்கானது தானா என சந்தேகமா இருக்கு..! - வானதி சீனிவாசன் கண்டனம்

தவெக ஆட்சிக்கு வந்த 6 மாசத்துல போதும்டா சாமி.. இந்த ஆட்சி என்ற மக்களின் முணுமுணுப்பு இப்போது ஓங்கிய குரலாக ஒலிக்கத் துவங்கி விட்டது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வானதி சீனிவாசன் கண்டனம்
Published on: 

சென்னை,

தவெக ஆட்சி உண்மையாகவே மக்களுக்கானது தானா சந்தேகமா இருக்கு என பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு, பழனி கோவில் பிரசாதம் விலை உயர்வு..! தவெக ஆட்சி உண்மையாகவே மக்களுக்கானது தானா என சந்தேகமா இருக்கு..! வெங்காயம் விலை உயர்வு உரிக்காமலேயே கண்ணீர் வரவழைக்கிறது என்றால், நாங்க இதுமட்டுமல்ல இந்தா பாருங்க என்று ஆவின் பால் பொருட்கள் விலையை உயர்த்தியும், பழனி கோவில் பிரசாதங்களின் விலையை உயர்த்தியும் பேரிடியை மக்கள் மேல் இறக்கி வைத்து தீபாவளி பரிசாகக் கொடுத்திருக்கிறது தவெக அரசு..!

ஆட்சிக்கு வந்த 6 மாசத்துல போதும்டா சாமி.. இந்த ஆட்சி என்ற மக்களின் முணுமுணுப்பு இப்போது ஓங்கிய குரலாக ஒலிக்கத் துவங்கி விட்டது. ஆனா நாங்க ரீல்ஸ் போடுறதுல மட்டும் குறையே வைக்க மாட்டோம்னு இவங்க பண்ற நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு பாதிக்கப்படுறது என்னவோ தமிழ்நாட்டு மக்கள் தான்..! ஜெய்ஹிந்த் பட காமெடி போல 'நான் தலைகீழாகத்தான் குதிப்பேன்' என்று மக்கள் நன்மைக்கு எதிரான செயல்களையே தொடர்ந்து செய்து வரும் முதல் - அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தோல்வி அடைந்த அரசு தான்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com