"நான் எங்காவது ஓடிவிட வேண்டும்.. இல்லை என்றால்" - விரக்தியில் பேசிய ஜி.கே. மணி

ராமதாஸ் தனது நிலைப்பாட்டில் இருந்து சற்று இறங்கி வந்துள்ளதாக பா.ம.க கவுரவ தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.
"நான் எங்காவது ஓடிவிட வேண்டும்.. இல்லை என்றால்" - விரக்தியில் பேசிய ஜி.கே. மணி
Published on

தைலாபுரத்தில் பா.ம.க கவுரவ தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது நிலைப்பாட்டில் இருந்து சற்று இறங்கி வந்துள்ளார். என்னுடைய வேதனையை அவரிடம் சொல்லி இருக்கிறேன். சிறிது சமாதானம் அடைந்துள்ளார். அதே போல் அன்புமணி ராமதாசும் இறங்கி வர வேண்டும்

தற்போதுள்ள சூழல் நீடிக்க கூடாது என்பது தான் எங்களின் கருத்து. இரண்டு பேரும் நேரில் சந்தித்து உட்கார்ந்து பேசினால் பிரச்னைகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும். அதற்கான முயற்சிகளில் தான் நான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன்

ராமதாஸ் அவர்களிடமே நான் 'நான் 2 முடிவை எடுத்திருக்கேன். ஒன்று உங்களுக்கும், என் குடும்பத்துக்கும், கட்சிக்கும், நாட்டுக்கும் தெரியாதபடி எங்கேயாவது நான் ஓடிவிட வேண்டும். இல்லையென்றால் உயிரோடே இருக்கக்கூடாது' என்று கூறினேன். அவர் என் வார்த்தைகளை உடனே வாபஸ் வாங்க சொன்னார்.

'நீங்க சரியாகுங்க மொதல்ல' என அவரிடமே சண்டை போட்டேன். கட்சியில் நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு வேதனை தருகிறது.

இவ்வாறு ஜி.கே. மணி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com