

மதுரை,
நேபாளம் வெள்ளத்தை அன்றே சொன்னேன் என மதுரையில் மூவர் நினைவேந்தல் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
மதுரையில் மூவர் நினைவேந்தல் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து இப்போது வந்தது இப்போது தான் வந்தது கிறிஸ்தவம், இப்போது தான்
வந்தது இஸ்லாம், எப்போது வந்தது இந்து? எப்போது வந்தது பௌத்தம்? நாம் யார்? உலகின் முதல் மொழி தமிழ், முதல் மாந்தன் தமிழன்.
நாங்கள் நீண்ட நாட்களாக பல்வேறு பிரச்சினைகளுக்கு களத்தில் போராடியிருக்கிறோம். சர்க்கார் படத்தின் போஸ்டர் கிழித்தது தான், சர்வதேச பிரச்சினையாகியுள்ளது. அதனால் தான் ஆட்சிக்கு வரவில்லை என அமைச்சர், அதை சபையில் பேசுகிறார். தமிழ்நாட்டில் அவ்வளவு பிரச்சனை நடந்திருக்கிறது, அதெல்லாம் பிரச்சினை இல்லையாம், சர்க்கார் போஸ்டர் தான் பிரச்சினையாம்.
எங்கள் மக்கள் கொஞ்சம் மயக்கத்திலும், பெருங்காதலிலும் இருக்கிறார்கள். 5 ஆண்டு ஆட்சி நடக்கப் போவதில்லை, காட்சி தான் நடக்கும். ரூல் நடக்காது, ஒன்லி ரீல் தான்.
"அமெரிக்காவில் என்னிடம் விசாரணை நடத்திய போது, ‘உன்னை எப்படி உன் நாட்டில் உயிரோடு விட்டுள்ளார்கள்?’ என்று கேட்டனர். பாஸ் என்று தான் என்னை அழைத்தார்கள். 'நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டார்கள்', சொன்னால் என் கட்சியில் சேர்வீர்களா என்று கேட்டேன், சிரித்துவிட்டனர்.
நான் போதிக்கும் போது உனக்கு தெரியாது, பாதிக்கும் போது தான் தெரியும் என்று பலமுறை கூறியிருக்கிறேன். நேபாளில் வெள்ளம் வந்து இறந்த பிறகு, நான் பேசியதை வெட்டி இப்போது போடுகிறார்கள். அமெரிக்க விஞ்ஞானி சொல்வதற்கு முன்பே,அரணையூர் விஞ்ஞானி நான் சொன்னதை யாரும் கேட்கவில்லை. நம்மாழ்வார் எழுதியதை படித்து தான், தெரு தெருவாக கத்தினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.