விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க முயற்சி எடுப்பேன் - பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க முயற்சி எடுப்பேன் - பிரேமலதா விஜயகாந்த்
Published on

விருத்தாச்சலம்,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த முறை பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:- விருத்தாச்சலத்தில் தான் இனி இருக்க போகிறேன். இங்கேயே வீடு கூட பார்க்க சொல்லிவிட்டேன். சென்னையில் வேலை இருக்கும் போது மட்டுமே அங்கு சென்று அந்த வேலைகளை கவனித்துவிட்டு பின் இங்கு வந்து இங்குள்ள வேலைகளை கவனிப்பேன்.

ஒரு 5 மணி நேரம் காரில் ஏறி இருந்தால் இங்கு வந்துவிடப்போகிறேன். ஒன்றிரண்டு நாட்கள் மீதமிருக்கும் வேலைகளை சேர்த்து கவனித்துக்கொள்வேன். விருத்தாச்சலம் தொகுதியில் நான் வெற்றி பெற்றால் தனி மாவட்டமாக அறிவிக்க முயற்சி எடுப்பேன். என்னுடைய சொல்லும் செயலும் கேப்டனை போல எப்போதும் ஒன்றாக தான் இருக்கும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com