மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தவெக ஆட்சி கவிழும் - ஆர்.எஸ்.பாரதி

மிசா பற்றி இப்போதைய இளைஞர்களுக்கு தெரியாது.
 ஆர்.எஸ்.பாரதி
Published on

மதுராந்தகம்,

மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக சட்டத்துறை மாநில துணை செயலாளர் பரந்தாமன் போட்டியிடுகிறார். இதையடுத்து மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தார். இதில் காஞ்சி மாவட்ட செயலாளர் தா.மோ அன்பரசன், தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மிசாவின் கொடுமை

அப்போது தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி பேசியதாவது:-மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவது பரந்தாமன் இல்லை, மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடுகிறார். மு.க.ஸ்டாலினுக்கும், மது சாந்தகத்திற்கும் தெருங்கிய தொடர்பு உள்ளது. இங்கு இருப்பவர்களை பார்க்கும் போது ஒவ்வொருவரின் முகத்திலும் கோபமும், எதிர்ப்பும் உள்ளது தெரிகிறது. நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தி தி.மு.க. ஆட்சியை கலைத்தார்கள். மிசா பற்றி இப்போதைய இளைஞர்களுக்கு தெரியாது. எங்களை போன்ற 80 வயதை கடந்தவர்களுக்கு நான் மிசாவின் கொடுமை தெரியும். இப்போதைய குழலில் மிசாவை பற்றி மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோருக்கு மட்டுமே தெரியும்.

த.வெ.க. ஆட்சி. கவிழும்

ஆனால் யாரோ எழுதி கொடுத்ததை சட்டமன்றத்தில் பேசுகிறார். நம் தலைவரை பற்றி பேசியவருக்கு தக்க பாடம் புகட்ட நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் தமிழகத்தில் யாருக்கும் இல்லாமல் மதுராந்தகம் தொகுதி கட்சியினருக்கு கிடைத்திருக்கிறது. மிசா வரலாறு முதல் முதலில் மதுராந்தகத்தில் தான் தொடங்கியது. நிச்சயமாக மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமன் வெற்றி பெறுவார். மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றால், ஜனவரி மாதத்துக்குள் த.வெ.க. ஆட்சி. கவிழும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் பேசும்போது. மதுராந்தகத்தில் தி.மு.க. வெற்றி விழா, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு மூடு விழாவாக அமையும் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com