’என் வீட்டு தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால்’ திமுக எம்பி ஆ.ராசா பரபரப்பு பதிவு

விசிலுக்கு முட்டுக்கொடுக்கும் ஏணி, சிறுத்தை என விமர்சித்த சர்ச்சை பதிவை ஆ.ராசா நீக்கியுள்ளார்.
’என் வீட்டு தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால்’ திமுக எம்பி ஆ.ராசா பரபரப்பு பதிவு
Published on

தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 இடங்களில் மட்டுமே அக்கட்சி வென்ற நிலையில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை ஆதரவு அளித்தன. இதில் காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் முதல் கட்சியாக இடம் பெற்ற நிலையில், விஜய் கோரிக்கையை ஏற்று விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் அமைச்சரவையில் இணைய சம்மதம் தெரிவித்தன.

இதன்படி, தவெக அமைச்சரவையில் விசிகவின் வன்னியரசும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஷாஜ்ஹானும் இணைந்தனர். அவர்கள் இருவருக்கும் முறையே சமூக நீதித்துறை மற்றும் சிறுபான்மையின நலத்துறை பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. தவெகவிற்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாகவும் திமுக கூட்டணியில்தான் நீடிப்பதாகவும் கூறி வந்த விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இணைந்துள்ளது.

திமுகவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதையடுத்து, திமுக தரப்பில் இருந்து விசிக மீதான விமர்சனம் எழத்தொடங்கியுள்ளது. குறிப்பாக திமுக எம்.பி மிக காட்டமான விமர்சனத்தை விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீக் மீது வைத்து இருந்தார். ஆ.ராசா சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு இருந்தார். அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து தனது பதிவை அழித்த ஆ.ராசா, புதிய பதிவு ஒன்றை போட்டுள்ளார். ஆ.ராசா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: "என் வீட்டு தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் முடத்தெங்கு என பெயர். இலக்கியத்தில் முடத்தெங்கு - அரசியலில் என்ன பெயர்?" என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com