

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சிகளின் பிரசாரம், பொதுக்கூட்டம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அந்த வகையில் தவெக சார்பில் இன்று மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இஸ்லாமிய மதத்தினரின் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டார்.
இந்நிலையில், தவெகவின் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தேர்தல் ஆணைய கண்காணிப்பு குழுவினர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் தொடர்களின் வருகை போன்றவற்றை தேர்தல் ஆணையம் வீடியோவாக பதிவு செய்துகொண்டது.