பிரதமரை அவமதித்த விஷக்கிருமிகளை உடனடியாக கைது செய்க! - நயினார் நாகேந்திரன்

பிரதமரை இழிவுபடுத்துவது, ஜனநாயகத்தின் பெயரால் செய்யப்படும் அப்பட்டமான தேசவிரோதச் செயல் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

இந்த விஷக்கிருமிகளை உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும். தவறினால், லட்சக்கணக்கான பாஜக தொண்டர்களின் போராட்டப் பெருவெள்ளம் உங்கள் அதிகாரக் கோட்டைகளைத் தகர்த்தெறியும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

போஸ்டரால் சர்ச்சை

திருச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை கொலையாளி போலவும், ரத்தக்கறை படிந்தவராகவும் சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள அருவருக்கத்தக்க போஸ்டர்கள் கடும் கண்டனத்திற்குரியவை. உலகம் போற்றும் ஒரு உன்னதத் தலைவரான பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்துவது, ஜனநாயகத்தின் பெயரால் செய்யப்படும் அப்பட்டமான தேசவிரோதச் செயலாகும்.

இவ்வாறு பாரதப் பிரதமர் மீது நஞ்சைக் கக்கி வருவதைப் பார்த்துப் பொறுமை காக்க பாஜக ஒன்றும் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் இயக்கமல்ல. எனவே, காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படாமல் வன்மத்தைப் பரப்பும் இந்த விஷக்கிருமிகளை உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும். தவறினால், லட்சக்கணக்கான பாஜக தொண்டர்களின் போராட்டப் பெருவெள்ளம் உங்கள் அதிகாரக் கோட்டைகளைத் தகர்த்தெறியும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.b

X

Daily Thanthi
www.dailythanthi.com