வடசென்னை அனல்மின் நிலையத்தில 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் 2-வது யூனிட்டில் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் 2-வது யூனிட் 2-வது அலகில் பராமரிப்பு பணிக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதனால் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2-வது யூனிட்டில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com