

சென்னை,
சென்னை, ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் வசிக்கும் பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்களுக்கான ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முகாம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்களுக்கான ஆயுள் சான்றிதழ் முகாம் சென்னை, எத்திராஜ் சாலையில் உள்ள தமிழ்நாடு வட்ட அலுவலகத்தில் நவம்பர் 1-ம் தேதி தொடங்கி, வரும் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஓய்வூதியதாரர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்களது ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம்.
சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில் வசிக்கும் ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக அந்தந்த பகுதி பிஎஸ்என்எல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. அதன்படி மாவட்ட வாரியான முகாம் தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
• திருச்சி: நவம்பர் 13-ம் தேதி (புதன்கிழமை)
• ஈரோடு: நவம்பர் 13-ம் தேதி (புதன்கிழமை)
• மதுரை: நவம்பர் 19-ம் தேதி (செவ்வாய்க்கிழமை)
• சேலம்: நவம்பர் 20-ம் தேதி (புதன்கிழமை)
எனவே, குறிப்பிட்ட இந்த மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி, தங்களுக்குரிய தேதிகளில் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.