தொழிலாளிக்கு சாகும் வரை சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தொழிலாளிக்கு சாகும் வரை சிறை
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர் மதுரை வீரன் (வயது 49). தொழிலாளியான இவர் கடந்த 10.2.2022 அன்று 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து மதுரை வீரனுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com