தொழிலாளிக்கு சாகும் வரை சிறை

தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தொழிலாளிக்கு சாகும் வரை சிறை
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 54). கூலித்தொழிலாளி. இவர் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ணஜெய ஆனந்த் விசாரித்து, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தனசேகருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தமிழக அரசு தலா ரூ. 10 லட்சம் நஷ்டஈடு வழங்க பரிந்துரையும் செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com