பேரணி நடத்த திட்டமிட்ட இம்ரான்கான் கட்சியினர்; தலைநகரில் 144 தடை உத்தரவை அமல்படுத்திய பாகிஸ்தான் அரசு

இஸ்லாமாபாத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்த பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
பேரணி நடத்த திட்டமிட்ட இம்ரான்கான் கட்சியினர்; தலைநகரில் 144 தடை உத்தரவை அமல்படுத்திய பாகிஸ்தான் அரசு
Published on: 

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி வரும் 27-ந்தேதி பிரமாண்ட பேரணி மற்றும் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் இஸ்லாமாபாத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்த அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்லாமாபாத் நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவில், "தலைநகர் முழுவதும் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சாப் மாகாணத்திலும் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், ராணுவப் படைகளும் குவிக்கப்பட்டு வருகின்றன. போராட்டத்தின்போது குறிப்பிட்ட பகுதிகளில் மொபைல் மற்றும் இணைய சேவைகளை முடக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com