சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் படுகாயம்

கம்பம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் படுகாயம் அடைந்தனர்
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் படுகாயம்
Published on

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 40). இவரது தந்தை பெனிக்ஸ் (60). இவர்கள் இருவரும் பெங்களூருவில் இருந்து காரில் பத்தனம் திட்டாவுக்கு வந்து கொண்டிருந்தனர். காரை நிஷாந்த் ஓட்டினர். தேனி மாவட்டம் கம்பம் புறவழிச்சாலையில் காட்டு பள்ளிவாசல் சந்திப்பில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையார பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் நிஷாந்த், பெனிக்ஸ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com