அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 240 காளைகள் இறக்கபட்டன 40 பேர் படுகாயம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 240 காளைகள் களம் இறக்கப்பட்டுள்ளன. காளைகள் முட்டியதில் 40 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 240 காளைகள் இறக்கபட்டன 40 பேர் படுகாயம்
Published on

மதுரை

மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இன்று காலை அவனியாபுரத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாவும் தொடங்கி வைக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர்தொடங்கி வைத்தனர்.

ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்

முதலாவதாக ஊர் மரியாதையை ஏற்கக்கூடிய கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.ஜல்லிக்கட்டு தொடங்கி 1 மணி நேரத்தில் 83 காளைகள் களத்தில் விளையாடி உள்ளன.வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து ஓடிவரும் காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்

கடந்த வருடத்தை விட இவ்வருடம் போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் போடப்பட்டது. சோதனைகளைக் கடந்து 954 காளைகளும், 623 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்ட்டில் மதியம் மதியம் 12.45 மணி நிலவரப்படி 240 காளைகள் களம் இறக்கப்பட்டுள்ளன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இதுவரை 40 பேர் காயமடைந்துள்ளனர்.

#ThaiPongal #Pongal #Jallikattu #AvaniyapuramJallikattu

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com