சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு.!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு.!
Published on: 

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. நேற்று மாலை அதிரடியாக சவரனுக்கு ரூ.800 உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.44,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.5,555-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒருகிராம் வெள்ளி 77 ரூபாய்க்கும், ஒருகிலோ 77,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com