கடலூரில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை

கடலூரில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டா.
கடலூரில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை
Published on

கடலூர் பாதிரிக்குப்பம் கணேஷ்நகரை சேர்ந்தவர் ரங்கதாஸ் (வயது 64). நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த இவர், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து விட்டார். உடன் அவரை அக்கம், பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது பற்றி அவரது மகன் ராஜேஷ்குமார் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com