தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று புதிதாக 10,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,13,378 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 48 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,205 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 6,250 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,20,369 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 79,804 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 3,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com