தமிழ்நாட்டில் மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் இடையே தான் போட்டி - உதயநிதி ஸ்டாலின்

தவெக வேட்பாளர் சத்தியபாமா சாதாரண 'பல்டி பாமா' அல்ல 'அந்தர் பல்டி பாமா' என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
Published on: 

திருப்பூர்,

இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றியை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-

கடந்த தேர்தலில் தாராபுரம் மக்கள் திமுகவுக்கு அல்வா கொடுத்துவிட்டனர். இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றியை மக்கள் உறுதி செய்ய வேண்டும். கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற துரோகிகளை மறக்க மாட்டோம்.

அதிமுக எம்.எல்.ஏ.க்களை பெட்டிகளை கொடுத்து முதல்-அமைச்சர் விஜய் விலைக்கு வாங்கினார். தவெக வேட்பாளர் சத்தியபாமா சாதாரண பல்டி பாமா அல்ல அந்தர் பல்டி பாமா. சட்டப்பேரவையில் காதில் பஞ்சு வைத்துக்கொள்ளும் அளவுக்கு முதல்-அமைச்சர் கத்துவார்.

மதுராந்தகம் தொகுதியில் கத்தி பேசிய விஜய் தாராபுரத்தில் நடிக்கிறார். சத்தியபாமா ஏன் அழுகிறார்? அவரை தேர்வு செய்த மக்கள் தான் அழ வேண்டும்.

சட்டப்பேரவையில் நாங்கள் படும் பாடு எங்களுக்கு தான் தெரியும். என்ன கேள்வி கேட்டாலும் பாட்டு மட்டுமே பாடுகிறார்கள். சட்டசபையில் முதல்-அமைச்சர் முன் நடனம், சண்டைக்காட்சி மட்டும் தான் அரங்கேறவில்லை. சத்தியபாமா வெற்றிபெற்றால் மீண்டும் கட்சி மாறுவார். காதல் தோல்வி பற்றி பேரவையில் எம்.எல்.ஏ. பேசுகிறார், முதல்-அமைச்சர் விஜய் சிரிக்கிறார்.

சட்டசபையில் நான் கேட்ட 18 கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை. சட்டப்பேரவையில் யாரும் ஓடக்கூடாது என சொல்லிவிட்டு முதல்-அமைச்சர் விஜய் ஓடினார். அண்ணன் எடப்பாடி பழனிசாமி பேசியதைக் கேட்கக்கூட பேரவையில் முதல்-அமைச்சர் இல்லை. தமிழ்நாட்டில் மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் இடையே தான் போட்டி..

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com