கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் கொடுக்கின்றனர் - அதிமுக வேட்பாளர் தர்ணா

தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு  திமுகவினர் பணம் கொடுக்கின்றனர் - அதிமுக வேட்பாளர் தர்ணா
Published on

கோவை,

தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது.

அதேவேளை, தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் , பரிசுப்பொருட்கள் பட்டுவாடா செய்தவாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது தொடர்பாக அரசியல் கட்சியினர் தொடர்புடைய நபர்கள், இடங்களில் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் கொடுப்பதாக அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் அவர் இன்று புகார் அளித்தார்.

அதேவேளை, திமுகவினர் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக புகார் அளித்தபோதும் தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com