நிலப்பிரச்சினையில் விவசாயியை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

தேனி அருகே நிலப்பிரச்சினையில் விவசாயியை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
நிலப்பிரச்சினையில் விவசாயியை தாக்கிய 6 பேர் மீது வழக்கு
Published on

தேனி அருகே கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). விவசாயி. இவரை நிலப்பிரச்சினையில் சிலர் தாக்கினர். காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில், அதே ஊரைச் சேர்ந்த பெருமாள்சாமி, அவருடைய மகன்கள் தனசேகரன், தனபாண்டி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com