டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் வெளிப்படையான விசாரணை நடந்து வருகிறது - அமைச்சர் ஜெயக்குமார்

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் வெளிப்படையான விசாரணை நடந்து வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் வெளிப்படையான விசாரணை நடந்து வருகிறது - அமைச்சர் ஜெயக்குமார்
Published on

சென்னை

சென்னை ஷெனாய் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் உள்ள உயரதிகாரிகள் யார் என்பதை ஸ்டாலின் சொல்ல வேண்டும். பொத்தம்பொதுவாக உள்நோக்கம் கற்பிக்கும் விதத்தில், தமிழக அரசு மீது காழ்ப்புணர்ச்சியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதில், தொடர்புடைய உயர் அதிகாரிகள், உயர்மட்ட பொறுப்பில் உள்ளவர்கள் யாரென்று குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அதை சொல்வதற்கு திராணியில்லை.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக தகவல் தெரிந்தால் சிபிசிஐடியிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் வெளிப்படையான விசாரணை நடந்து வருகிறது.

ஆனால், ஒரு தகவல் தெரிந்துகொண்டு அதனை சொல்லாமல் இருப்பதும் தவறு. சம்மன் அனுப்பப்பட்டு எப்படி விசாரித்து தகவல்களை பெற முடியுமோ, அந்த வகையில் பெறுவோம் என கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com