உடன்குடியில்திடீர் சூறாவளி காற்று

உடன்குடியில் திடீர் சூறாவளி காற்று வீசியது.
உடன்குடியில்திடீர் சூறாவளி காற்று
Published on

உடன்குடி:

உடன்குடி சந்தையடித்தெரு பஜாரில் நேற்று முன் தினம் இரவு சுமார் 11 மணி அளவில் திடீர் சூறாவளி காற்று வீசியது. இதில் மெயின்ரோடு ஓரம் இருந்த வேப்பமரம் முறிந்து ரோட்டில் விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் ஏதும் செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், பல கடைகள் முன்பு வைத்திருந்த விளம்பர பலகைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. பொதுமக்கள் திரண்டு சென்று மெயின் ரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com