திருப்பத்தூரில் பெற்ற மகனையே போலீசில் பிடித்துக் கொடுத்த பெற்றோர்... என்ன காரணம் தெரியுமா..?

போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக பிரசாத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூரில் பெற்ற மகனையே போலீசில் பிடித்துக் கொடுத்த பெற்றோர்... என்ன காரணம் தெரியுமா..?
பிரசாத்
Published on: 

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில், மதுபோதையில் தினமும் வீட்டில் தகராறு செய்து வந்த பெற்ற மகனை, அவரது பெற்றோரே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் போதையில் தகராறு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரசாத். இந்த இளைஞர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து போதை தலைக்கேறியதும் தனது பெற்றோரிடமும், குடும்பத்தினரிடமும் தேவையின்றி வம்பு இழுத்து, கடுமையான முறையில் தகராறு செய்து வந்துள்ளார். பெற்றோர் பலமுறை கண்டித்தும், அறிவுரை கூறியும் பிரசாத் தனது வழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

போலீசில் ஒப்படைப்பு

அவரது போதை வெறியாட்டம் நாளுக்கு நாள் எல்லையைத் தாண்டியதால், மனமுடைந்த பெற்றோர் ஒருகட்டத்தில் வேறு வழியின்றி அதிரடி முடிவு எடுத்தனர். வீட்டில் தகராறு செய்த பிரசாத்தை அப்படியே பிடித்து, நாட்டறம்பள்ளி காவல் நிலையத்திற்கு நேரில் அழைத்துச் சென்றனர். "தினமும் போதையில் வந்து எங்களை வாழ விடாமல் டார்ச்சர் செய்கிறான், இவனை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை

பெற்ற மகனைப் பெற்றோரே காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்த இந்த சம்பவம், நாட்டறம்பள்ளி வட்டாரத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக பிரசாத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com