திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 320 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 320 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 320 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள்.

சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர்,மதுரை, மாவட்டங்களில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 448 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பினர். 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com