தூத்துக்குடியில்புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது

தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது செய்யப்பட்டார்.
Published on

தூத்துக்குடி கோமஸ்புரம் முகமது மகன் மொய்தீன்(வயது40). வியாபாரி. இவர் அப்பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், முனியசாமி, தனிப்பிரிவு ஏட்டு முருகேசன் மற்றும் போலீசார் கோமஸ்புரம் பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதியில் மொய்தீன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று கொண்டிருந்துள்ளார். அவரிடம் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.21 ஆயிரத்து 15 மதிப்புள்ள 33 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைதுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com