தூத்துக்குடியில்தொழிலாளியை பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் சிக்கினார்

தூத்துக்குடியில் தொழிலாளியை பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் சிக்கினார்
தூத்துக்குடியில்தொழிலாளியை பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் சிக்கினார்
Published on

தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மடத்தூர் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ராஜகோபால்நகரைச் சேர்ந்த நல்லகண்ணு மகன் இசக்கிமுத்து என்ற ராஜா (29) என்பதும், அவர் அந்த பகுதியில் வந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவர் மீது போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com