அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா

அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.
அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா
Published on

தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு இளம் அறிவியல் மற்றும் கலைப்பிரிவு பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு முடிவடைந்தது. இதையடுத்து நேற்று முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் காலையில் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கும், மதியம் கலைப்பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. விழாவில், கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, அனைத்துத்துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com