பிரேசில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பிரேசில் நாட்டில் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி-2022 கடந்த மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற்றது.
பிரேசில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Published on

பிரேசில் நாட்டில் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற்றது. போட்டியில் பங்கேற்று 2022இல் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த  ஜெர்லின் அனிகா,மற்றும் பிரித்வி சேகர் ஆகியோருக்கு ரூ. 1.10 கோடிக்கான காசோலைகளை ஊக்கத் தொகையாக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் இன்று வழங்கினார் .

பிரேசில் நாட்டில் 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த ஜெர்லின் அனிகா பங்கேற்றார் . இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் குழுப் போட்டி ஆகியவற்றில் 3 தங்கப் பதக்கங்களை ஜெர்லின் அனிகா வென்றார்.ஜெர்லின் அனிகாவுக்கு ரூ.75 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை ஊக்கத்தொகையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..

மேலும் ஆடவருக்கான டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்குபெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த சேர்ந்த. பிரித்வி சேகர் பங்கேற்றார் . இவர் இரட்டையர் பிரிவில் 1 வெள்ளிப்பதக்கமும், ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் 2 வெண்கலப்பதக்கமும் என 3 பதக்கங்களை வென்றார் பிரித்வி சேகர்க்கு ரூ.35 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஊக்கத்தொகையாக மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com