தாமிரபரணி ஆற்றில் தங்க மூட்டை கிடந்த விவகாரம்: வாலிபர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை

சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு அஜய் தங்கம் தலைமை யிலான போலீசார், ஆத்தூர் ஆற்றங்கரையைச் சேர்ந்த கருப்பசாமி (வயது28) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்
தாமிரபரணி
Published on: 

ஆறுமுகநேரி,

ராமநாதபுரம் முடுக்கு தருவை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தியபோது, சந்தேகத்திற் கிடமாக நின்ற ராமநாதபுரம் குப்புசாமி, பரமக்குடி செல்வராஜ் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர், முக்காணி பகுதியைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

முதலில் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்த அவர்கள், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் முக்காணி தாமிரபரணி ஆற்றில் கிடந்த தங்க மூட்டையை பங்கிடுவதற்காக வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 38 தங்கக் கட்டிகள், 28 பவுன் நகை மற்றும் ரூ.12.20 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், அவற்றைக் கேட்பாரற்றுக் கிடந்தவை எனக் கருவூலத்தில் ஒப்படைத்து வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றினர்.

இவ்வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு அஜய் தங்கம் தலைமை யிலான போலீசார், ஆத்தூர் ஆற்றங்கரையைச் சேர்ந்த கருப்பசாமி (வயது28) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கிருந்து தங்கச்சங்கிலி, ஆரம், மோதிரம், கைச்சங்கிலி, கம்மல் என 54 பவுன் நகைகள் மற்றும் ரூ.67 ஆயிரம் றிமு தல் செய்யப்பட்டது.

இந்த நகைகள் தசரா திருவிழா பக்தர்களுக்கு முடி மற்றும் வேடப்பொருட்கள் விற்ற பணத்தில் வாங்கியதாக அவர் கூறியது நம்பும்படியாக இல்லாததால் கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர். இதில் ஆத்தூர், முக்காணி பகுதியைச் சேர்ந்த வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என தீவிர விசாரணை நடந்து வருகிறது.

X