சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.91.45 லட்சம் வருவாய்


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.91.45 லட்சம் வருவாய்
x

1 கிலோ 942 கிராம் தங்கம் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வருகை தரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்தி கடன்களை நிறைவேற்றுகின்றனர். மேலும், கோவில் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியதும் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சமயபுரம் மாரியம்மன் கோவில் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள் ஈடுபட்டனர். அதில், உண்டியல் காணிக்கை மூலம் 91 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மேலும், 1 கிலோ 942 கிராம் தங்கம், 3 கிலோ 280 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story