பாபநாசம் மலையடிவார கிராமங்களில் கரடிகள் அட்டகாசம் அதிகரிப்பு

கரடி ஒரு ஓட்டலில் புகுந்து பொருட்களை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாபநாசம் மலையடிவார கிராமங்களில் கரடிகள் அட்டகாசம் அதிகரிப்பு
Published on

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களான அனவன்குடியிருப்பு, பசுக்கிடைவிளை, பொதிகையடி உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் இரவு நேரத்தில் தொடர்ந்து கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியேற அச்சமடைந்து வரும் நிலையில், கரடிகளை அடர்வனப் பகுதிக்கு விரட்ட தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அனவன்குடியிருப்பு பகுதியில் சந்திரன் என்பவர் மளிகை கடை மற்றும் சிறிய ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் ஓட்டலில் புகுந்த கரடி கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளது. மேலும் சமையல் எண்ணெயை குடித்து விட்டு தப்பி சென்றுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், கரடிகளால் பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பாக விரைந்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com