மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு

மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளது.
மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு
Published on

நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். அங்குமரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.13 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்போது ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் டன் ஒன்று ரூ.14 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. வரத்து குறைந்ததால் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com