தமிழகத்தில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு

தமிழகத்தில் காவிரி நீர் வரத்து தற்போது அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசன தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தோ அல்லது குறைத்தோ திறந்து விடப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் டெல்டா பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் காவிரி நீர் வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 12,000 கன அடியிலிருந்து 16,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com