வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் பயணிகள் பெட்டி அதிகரிப்பு

கோப்புப்படம்
20 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காகவும், கூடுதல் கூட்டத்தை கையாளுவதற்காகவும், பின்வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நான்கு கூடுதல் இருக்கை வகுப்பு பெட்டிகளுடன் அதிகரிக்கப்படுகின்றன. இதனால், இவை 20 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரெயிலாக இயக்கப்படும்.
ரெயில் எண் 20627/20628 சென்னை எழும்பூர் – நாகர்கோவில் – சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், 2025 மே 08 முதல் இரு திசைகளிலும் 4 வந்தே பாரத் இருக்கை வகுப்பு பெட்டிகளுடன் அதிகரிக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story