பூக்களின் விலை உயர்வு

பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
பூக்களின் விலை உயர்வு
Published on

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு பூக்களை பயிர் செய்துள்ளனர். பூக்கள் விளைந்ததும் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கோவில் விஷேசங்கள் அதிகமாக இருப்பதால் பூக்களின் வில உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த வாரம் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ. 400-க்கு விற்றது தற்போது ரூ.800-க்கும், முல்லை பூ ரூ.500-க்கு விற்றது ரூ.850-க்கும், காக்கட்டான் பூ ரூ.400-க்கு விற்றது ரூ.700-க்கும், ரோஜா ரூ.160-க்கு விற்றது ரூ.250-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கு விற்றது ரூ.700-க்கும் விற்பனையானது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com