திட்டச்சேரி, திருமருகல் பகுதியில் எலுமிச்சை பழம் விலை அதிகரிப்பு

திட்டச்சேரி, திருமருகல் பகுதியில் எலுமிச்சை பழம் விலை அதிகரிப்பு
திட்டச்சேரி, திருமருகல் பகுதியில் எலுமிச்சை பழம் விலை அதிகரிப்பு
Published on

கடும் வெயில் காரணமாக தேவை அதிகரிப்பால் திட்டச்சேரி, திருமருகல் பகுதியில் எலுமிச்சை பழம் விலை அதிகரித்துள்ளது. இதனால் 1 கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கத்திரி வெயில்

திட்டச்சேரி, திருமருகல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சமீபத்தில் மழை பெய்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் காரணமாக கத்தரி வெயில் வாட்டி எடுத்து வருகிறது. காலை முதல் மாலை வரைக்கும் வெயில் உக்கிரமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கு சிரமப்படுகின்றனர்.

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இளநீர், தர்பூசணி, பனை நுங்கு, சர்பத், நீர்மோர், பழரசம் மற்றும் பல்வேறு குளிர்ச்சி தரும் பானங்களின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதில் எலுமிச்சை பழத்தின் பங்கும் அதிகமாக இருப்பதால் இதன் தேவையும் அதிகரித்துள்ளது.

விலை அதிகரிப்பு

இவ்வாறு எலுமிச்சை பழத்தின் தேவை அதிகமாக இருப்பதால் அதன் விலையும் அதிகரித்துள்ளது. சாதாரண காலங்களில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இதன் விலை மேலும் அதிகரித்துள்ளது. திட்டச்சேரி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது பெரும்பாலான கடைகளில் எலுமிச்சை பழம் எண்ணிக்கை அளவில் கொடுப்பதற்கு பதில் எடை அளவில் விற்பனை செய்யப்படுகிறது. கடும் வெயில் காரணமாக தேவ அதிகரிப்பால் திட்டச்சேரி, திருமருகல் பகுதியில் எலுமிச்சை பழம் விலை அதிகரித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com