மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

பாசனத்துக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
Published on: 

மேட்டூர்,

மேட்டூர் அணைக்கு கடந்த சில வாரங்களாக வினாடிக்கு ஆயிரம் கனஅடிக்கு கீழ் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இந்த நீர்வரத்து அதிகரித்து இருக்கலாம் என கருதப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 5,500 கன அடியாக இருந்த நிலையில், இன்று 4 ஆயிரத்து 753 கனஅடியாக குறைந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 55.24 கன அடியில் இருந்து 55.07 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணைக்கு நீர்வரத்தை விட தண்ணீர் திறக்கும் அளவு கூடுதலாக இருப்பதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அணையின் நீர் இருப்பு 21.154 டி.எம்.சி. ஆக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com