செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
Published on

சென்னை,

தெற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாக அம்பத்தூர், தி-நகர், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com