குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்...!

குற்றாலம் ஐந்தருவியில் ஆர்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்...!
Published on

தென்காசி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மீண்டும் சீசன் களைகட்ட தொடங்கியது. கடந்த சில நாட்களாக அனைத்து அருவிகளிலும் மிக குறைவான அளவில் தண்ணீர் விழுந்தது.

இதனால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் இன்று காலை முதல் மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில் மழை பெய்தது.

இதனால் இன்று காலை முதல் ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் விழுகிறது. அவற்றில் சுற்றலா பயணிகள் ஆனந்த குளியில் போட்டனர். ஆனால் குற்றாலம் மெயின் அருவியில் தற்போது குறைந்த அளவு தண்ணீர் விழுகிறது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com