மோட்டா ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை உயர்த்திட வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பயிர் கடன் தள்ளுபடியையும் விவசாயிகள் எதிர்பார்த்த முறையில் உடன் அறிவிப்பை செய்திட வேண்டுகிறோம்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி
பி.எஸ்.மாசிலாமணி
Published on

சென்னை,

மோட்டா இரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை உயர்த்திட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை. இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கரும்பு.. மற்றும் நெல் விலை உயர்வு,தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். மோட்டா ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை உயர்த்திட வேண்டும்... தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரல்..

நெல் விலை உயர்வு

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்-அமைச்சரின் அறிவிப்பாக பொதுப்பணி துறை அமைச்சர் நெல் மற்றும் கரும்புக்கு... நெல் குவிண்டால் ரூபாய் 3500 விலையாக தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என எதிர்பார்த்து இருந்த நிலையில்.... தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள விலை உயர்வை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.

கரும்பு சாகுபடி

கடந்த 7.ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் 8 அமைச்சர்களுடன் நடந்த கலந்துரையாடலில் நெல் மற்றும் கரும்புக்கான விலை உயர்வை நடப்பு பருவத்திற்கு உடன் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். தமிழ்நாட்டில் தற்போது 30 சதவிதம் அளவிற்கே கரும்பு சாகுபடி உள்ளதை.. முந்தைய நிலையில் உயர்த்திட வேண்டும் என கடலூரில் நடந்த கரும்பு உற்பத்தியாளர் சங்க மாநாடு தீர்மானம் மற்றும் கூட்டத்தில் கரும்பு விவசாய சங்க தலைவர் பேசியதை ஏற்று சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்து இருப்பதை பாராட்டுகிறோம்.

பாராட்டுகிறோம்

இந்த நிலையில் நடப்பு பருவத்திற்கான கரும்பு விலையாக மத்திய அரசின் விலையோடு டன் ஒன்றுக்கு 709.50 ரூபாய் சேர்த்து ரூபாய் 4000 என்று அறிவித்திருப்பதையும், கரும்பு சாகுபடி பரப்பை உயர்த்திட நடவடிக்கை எடுக்க உள்ளதையும் பாராட்டுகிறோம்.

மோட்டா ரக

மேலும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு கடந்தாண்டு மத்திய அரசு அறிவித்த விலையுடன் நடப்பாண்டிற்கு ஊக்கத்தொகையாக சன்ன ரகத்துக்கு ரூபாய் 289 சேர்த்து ரூ.2750 எனவும்... மோட்டா ரகத்திற்கு ரூபாய் 159 சேர்த்து 2600 ரூபாய் என்றும் அறிவித்துள்ளளதை பாராட்டுகிறோம்.

விவசாய கடன்கள் தள்ளுபடி

மற்றும் த.வெ.க. அரசின் தேர்தல் கால வாக்குறுதிபடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில்.. கடந்த ஏழாம் தேதி அன்று அமைச்சர்கள் முன் நடந்த பேச்சுவார்த்தையில் நாங்கள் வலியுறுத்தியபடி, தள்ளுபடி அறிவிப்பை செய்திட வேண்டும். ஏனெனில்... வங்கியாளர்கள் விவசாயிகளிடம் கடனை திருப்பி செலுத்த வற்புறுத்தி வருகிறார்கள். இரண்டாம் கட்ட நிலையில் விவசாயிகள் இருப்பதால் வரும் சாகுபடி பணிகளில் கவனம் செலுத்த முடியாது விவசாயிகள் தவிக்கின்றனர். எனவே பயிர் கடன் தள்ளுபடியையும் விவசாயிகள் எதிர்பார்த்த முறையில் உடன் அறிவிப்பை செய்திட வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com