தேர்தலில் சுயேச்சையாக போட்டி: தி.மு.க.வில் மேலும் 19 நிர்வாகிகள் நீக்கம்

தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் தி.மு.க. நிர்வாகிகள் மேலும் 19 பேரை அக்கட்சியின் தலைமை நீக்கி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இடம் கிடைக்காமல் சுயேச்சையாக போட்டியிடும் தி.மு.க. நிர்வாகிகளின் பெயர் பட்டியலை கட்சி தலைமை சேகரித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே 110 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர்கள், தோழமை கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம் பீர்க்கன்கரணை பேரூர் கழக 1-வது வட்டத்தை சேர்ந்த ரா.ஹேமாவதி, அவருக்கு உறுதுணையாக இருந்த துணை செயலாளர் அ.கதிரவன், 1-வது வார்டு செயலாளர் ஏ.சேகர் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை மேற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் அ.ராஜேந்திரன், வளசரவாக்கம் நகர முன்னாள் செயலாளர் அ.ஜெயசீலன், சோழிங்கநல்லூர் மத்திய பகுதி பொருளாளர் சி.ரங்கன், 189-வது வட்ட பிரதிநிதி ஆர்.கன்னியப்பன் ஆகியோரும் தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com