

சென்னை,
தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தென்கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (HHI) நிறுவன உயர் அதிகாரிகளை அமைச்சர் கீர்த்தனா சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்து ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் கப்பல் கட்டும் திட்டத்தை செயல்படுத்த ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு உரிய வழிவகை செய்யப்படும் என அமைச்சர் கீர்த்தனா வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு தென்கொரியாவுக்கு அமைச்சர் கீர்த்தனா ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.