விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வலியுறுத்தல்: த.வெ.க. நிர்வாகிகள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்

திண்டுக்கல்லில் நடந்த த.வெ.க. நிர்வாகிகள் போராட்டத்தின்போது, தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கெடு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வலியுறுத்தல்: த.வெ.க. நிர்வாகிகள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம், திருச்சி ரோடு கல்லறை மேடு அருகே தமிழக வெற்றிக்கழகம் செயற்குழு உறுப்பினர் சரண்யா மற்றும் வளர்மதி, அகஸ்தியா ஆகியோர் த.வெ.க. தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைத்து சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கெடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட த.வெ.க. நிர்வாகிகளை அந்த இடத்தில் இருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com